UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – UAE இடையேயான விமானப் போக்குவரத்துத்தடை ஜூலை 21 ஆம் தேதிவரையில் நீட்டிப்பு..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத்தடை ஜூலை 21 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர்மேன் (NOTAM) க்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையில்,” ஜூலை 21, 2021 23:59 மணி வரையில் இந்தியா மற்றும் லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் விமானங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்துத்தடை விதிக்கப்பட்டது. பல்வேறு முறை இந்த அறிவிப்பு நீட்டிக்கப்பட்டு பின்னர் இறுதியாக ஜூன் 23 ஆம் தேதிமுதல் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் விமானங்களை இயக்க அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும் ஜூலை 6 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை அமலில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் விமானங்களை மீண்டும் இயக்குவது குறித்து அறிவிக்கப்படும் என இந்தியாவின் ஏர் இந்தியாவும் துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் GCAA இருநாடுகளுக்கு இடையேயான பயணத்தடையை நீடித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்திருக்க வேண்டும், ரேபிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதுகுறித்து கடந்தவாரம் Big FM-ற்கு அளித்த பேட்டியில் அமீரகத்திற்கான துணைத் தூதர் டாக்டர்.அமன் பூரி பேசுகையில்,” விமான நிலையத்தில் ரேபிட் டெஸ்ட் வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருநாட்டு அரசுகளும் நிலையை கவனித்துவருகின்றன” என தெரிவித்திருந்தார்.

Stock-Abu-Dhabi-airport-passengers_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap