துபாய் – ஷார்ஜா சாலையில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கூகுள் மேப்பின்படி ஷேக் முகமது பின் சயீத் சாலை, E11 மற்றும் சில உட்புறச் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது.
சாலை விதிமுறைகளுக்குட்பட்டு மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு வாகனவோட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

சூழும் பனிமூட்டம்
இன்று காலை அமீரகத்தின் உள் மற்றும் கடலோரப்பகுதிகளில் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் காலை 2 மணிமுதல் 9.30 மணிவரையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாலைகள் சரிவரத் தெரியாது என NCM தெரிவித்திருக்கிறது.
A chance of fog formation and deteriorating horizontal visibility to lower levels and lacking at times over some coastal and internal areas especially Westward, from 02:00 till 09:30 Wednesday 11 / 11 / 2020. pic.twitter.com/sY0G5QuHDT
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 10, 2020
இதனையடுத்து “வாகனவோட்டிகள், எலெக்ட்ரானிக் பலகைகளில் குறிப்பிட்டுள்ள வேகத்தின் அடிப்படையில் வாகனத்தை கவனமுடன் இயக்குமாறு” அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்திருக்கிறது.
இன்றைய நாளின் பிற்பகுதியில் வானிலை சீராகவும் நாட்டின் கிழக்குப் பகுதியில் பகுதி மேகமூட்டமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#urgent | #AbuDhabi_Police call on motorists to exercise caution due to reduced visibility during the fog. They are urged to follow changing speed limits displayed on electronic information boards.
Drive Safely@itcabudhabi @NCMS_media@abudhabi_adm@ADEK_tweet— شرطة أبوظبي (@ADPoliceHQ) November 10, 2020
அதிகபட்சமாக நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதேபோல உள் மற்றும் வட கடலோரப்பகுதிகளில் பனிமூட்டம் இருக்கும் எனவும் இன்று இரவு மற்றும் நாளை காலை காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் என NCM தெரிவித்திருக்கிறது.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் லேசான சீற்றத்துடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.