துபாயில் மெட்ரோ ரயில், பஸ் தொடர்ந்து பயன்படுத்துபவரா நீங்கள்; தங்கம் வெல்ல உங்களுக்கு வாய்ப்பு..??

Take public transport, win gold in Dubai as emirate marks Public Transport Day. (Photo : Gulf News)

துபாயில் நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரை 11 நாட்களுக்கு, தங்கம் வெல்ல உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

எப்படி..?

துபாய் மெட்ரோ, பஸ், அப்ரா (வாட்டர் டாக்ஸி), துபாய் ஃபெர்ரி மற்றும் துபாய் டிராம் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள். அதிர்ஷ்டசாலிகள் தங்கக் கட்டிகளை வெல்லலாம்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) பொது போக்குவரத்து தினத்தின் 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

கூடுதலாக, RTAவின் 14 வது ஆண்டு நிறைவை, ‘சிறந்த வாழ்க்கைக்கு சிறந்த போக்குவரத்து’ என்ற பெயரின் கீழ் கொண்டாடப்படும்.

பொதுப் போக்குவரத்து தினத்தின் 10 வது பதிப்பு, நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரை 11 நாட்கள் இயங்கும். துபாய் டிராமின் ஐந்தாவது ஆண்டு நிறைவுடன் இந்த தங்கம் வெல்லும் வாய்ப்பும் நிறைவடையும்.

கூடுதல் விவரங்கள் அறிய RTA அதிகாரபூர்வ பக்கத்தை காணவும்.

Loading...