UAE Tamil Web

உங்களுடைய குடும்பம் மற்றும் நாட்டின் நலன் கருதி தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் – புர்ஜ் கலீஃபாவில் வெளியிடப்பட்ட அட்டகாச வீடியோ..!

Capture

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இன்று இரவு அட்டகாச வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில் “உங்களுடைய நலன் மற்றும் உங்களுடைய குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நலன் ஆகியவற்றைக் காக்க, தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்” என வலியுறுத்தப்பட்டது.

இந்த வீடியோவை துபாய் ஊடக அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் கடந்தாண்டு அதிகரித்ததைத் தொடர்ந்து அமீரக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. இதன் ஒருபகுதியாக இலவச தடுப்பூசித் திட்டம் அமீரகத்தில் நடைபெற்றுவருவது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

Capture
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap