UAE Tamil Web

கோல்டன் விசாவை பெற்ற நடிகர் நாசர்.. தொடர்ந்து தமிழ் திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் அமீரக அரசு

பிரபல நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி  கவவுரவிப்பு செய்துள்ளது.

தமிழ் சினிமா முண்ணனி நடிகர்களில் ஒருவரான நாசர்,  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரை  நட்சத்திரங்கள் சிலர் தான் இதை பெற்றுள்ளனர்.

நடிகர் நாசருக்கு கோல்டன் விசா கிடைக்க முயற்சி செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் வசிம் அதானுடன் நடிகர் நாசர் இதனை பெற்றார்.

முன்னதாக தமிழ் திரை நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, பார்த்திபன், மீனா, ஆண்ட்ரியா ஆகியோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap