UAE Tamil Web

நேற்று விஜய் சேதுபதி இன்று நடிகை மீனா.. கோல்டன் விசா வழங்கி கௌரவித்த அமீரகம்..!

அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உட்பட பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்திய படங்களிலும் மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் குடிமக்களாக கருதப்படுவார்கள். இவர்கள் அமீரகத்தில் அனுமதி இன்றி தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை பெறலாம்.

இந்நிலையில், தமிழ் நடிகை மீனாவுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகை மீனா, துபாயில் நடக்கும் EXPO கலந்துகொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த கவுரவத்தை தந்த அமீரக அரசுக்கு நன்றி. துபாய் EXPO 2020-இல் இந்த விசாவை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் மீனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் கோல்டன் விசா வழங்கி அமீரகம் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap