UAE Tamil Web

அமீரகத்தில் நடிப்பில் ஆர்வமுள்ள தமிழ் பெண்ணைத் தேடும் இயக்குனர்..!

Casting-Call-Bob-Carter

அமீரகத்தில் வசித்துவரும் பிரபல தமிழ் பாடல் இயக்குனரான ஷஹீது ரஹ்மான் தனது அடுத்த பாடலை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். இவருடைய முந்தைய பாடல்கள் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அவரது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு பலரிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

- Advertisment -

நம்முடைய நிருபருக்கு ஷஹீது ரஹ்மான் அளித்த பேட்டியில்,” இது என்னுடைய அடுத்த தமிழ் பாடலாகும். முந்தைய பாடல்கள் எங்களுக்கு நற்பெயரைத் தேடித் தந்திருக்கின்றன. எனது குழுவினருக்கும் மக்களுக்கும் தான் நன்றி சொல்லவேண்டும்” என்றார்.

புதிதாக இயக்க இருக்கும் பாடல் பற்றிக் கேட்கையில்,” எங்களுடைய குழு அடுத்த படைப்பிற்குத் தயாராக இருக்கிறது. அதேவேளையில் நடிப்பின் மீது ஆர்வமும், திறமையும் உள்ள தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில், புதுமுகம் ஒன்றினைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். கலை மீதான விருப்பமும், நடிப்புத் திறமையும் உள்ள அமீரக வாழ் தமிழ்ப் பெண்கள் நிச்சயம் என்னைத் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

மேலும், தனது அடுத்த படைப்பில் புது முகம் ஒருவரே கதாநாயகியாக இருப்பார் எனவும், விருப்பமுள்ள பெண்கள் connect@shaheedrahman.com என்ற இணைய முகவரியைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.