UAE Tamil Web

முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கோல்டன் விசா- துபாய் அரசின் அறிவிப்பால் திகைத்த குடும்பம்..!

NASRIN

குறிப்பிட்ட சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்க இருப்பதாக கடந்தாண்டு அமீரக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் பல்வேறு இந்தியர்களுக்கு இதுவரையில் கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டு வந்த வேளையில் தற்போது முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் அவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கியிருக்கிறது துபாய் அரசு.

திண்டிவனத்தில் பிறந்த டாக்டர் நஸ்ரின் பேகம், கடந்த 2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேதிக் கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளார். இதையடுத்து மருத்துவ பணிக்காக 2013-ல் துபாய் சென்றார். 2017 ஆண்டு முதல் (MOH) மருத்துவ உரிமம் பெற்றார். இந்நிலையில், சபீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக துபாயில் ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.

“கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழகப் பெண் மருத்துவர் என்ற பெருமையை என்னுடைய தந்தை சையது பஃதா, தாய் நசீமா பேகம் ஆகியோருக்கு சமர்பிக்கிறேன்” என நஸ்ரின் உருக்கமாக தெரிவித்தார்.

NASRIN
6 Shares
Share via
Copy link