UAE Tamil Web

10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவைப் பெற்றார் தமிழக நடிகர் பார்த்திபன்..!

parthiban

தமிழக நடிகர் பார்த்திபனுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியது துபாய் அரசு. இதன்மூலம் கோல்டன் விசா பெறும் முதல் தமிழக நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றார்.

குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அமீரக அரசு இந்த கோல்டன் விசாவை வழங்கிவருகிறது. சஞ்சய் தத், மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நடிகை ஊர்வசி ரவுதேலா, மீரா ஜாஸ்மின், பிரபல பின்னணிப் பாடகி சித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியுள்ளது அமீரகம்.

இந்த விசா பெற உதவிபுரிந்த ஜுமா அல் மெய்ரி குரூப் ஆஃப் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஷானித்திற்கு நன்றி தெரிவிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap