UAE Tamil Web

துபாய் EXPO-வில் ஒளிபரப்ப இருக்கும் தமிழ் படங்கள்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

கடந்த 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய துபாய் EXPO 2020, மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைகிறது. அதில் தமிழ் படங்கள் திரயிடப்படவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்,

முன்னதாக துபாய் EXPO 2020-வில் இந்திய அரங்கில் இசையமைப்பாளர் அனிருத், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண பல நாட்டு ரசிகர்கள் கூட்டம் அலைமோதின. துபாய் EXPO இந்திய அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டம் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டது.

இந்த கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரங்கில், தற்போது தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்திய அரங்கில் அஜித் நடித்த விஸ்வாசம், தனுசின் அசுரன், சூப்பர் டீலக்ஸ், தெலுங்குப் படமான ஜெர்சி, மலைபாளப் படமான ஜல்லிக்கட்டு போன்ற இந்தியப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

துபாய் EXPO 2020 கண்காட்சிக்கு தமிழகத்தின் சார்பில் அரசு துறைகள் பங்கேற்க தமிழக அரசு ஏற்கனவே ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், கண்காட்சியில் பங்கேற்க மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap