அபுதாபி பிக் டிக்கெட்டின் வாராந்திர டிராவில் தமிழகத்தைச் தெட்சிணாமூர்த்தி மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
அபுதாபி பிக் டிக்கெட்டின் டிராவில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி கூறுகையில், “நான் கடந்த ஒன்பது வருடங்களாக ஐக்கிய அரபு அமீரத்தில் வசித்து வருகிறேன். ஒரு நாளாவது எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஐந்து வருடங்களாக பிக் டிக்கெட்டை வாங்கி வருகிறேன். இறுதியாக அது நடந்துவிட்டது. முன்னதாக டிக்கெட்டுகளை எனது நண்பர்களுடன் இணைந்து வாங்கி வந்தேன். தற்போது இந்த முறை நான் தனியாக வாங்கினேன்” என்றார்.
“இந்த வெற்றியின் மூலம், என் மனைவியையும் மகனையும் இங்கே அழைத்து வரவுள்ளேன். நாங்கள் எளிய குடும்பம். இங்கு கட்டுமான நிறுவன ஒன்றில் 2500 திர்ஹம்ஸ் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன்” என்று தெட்சிணாமூர்த்தி மீனாசிசுந்தரம் மேலும் கூறினார்.