UAE Tamil Web

துபாயில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழர்.. உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனு

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தர்கா வலசை பகுதியைச் சேர்ந்த சேது மகன் நாகராஜ் (52) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வேலைக்காக துபாய் வந்துள்ளார்.

குடும்ப திருமணத்திற்காக கடந்த நவம்பரில் ஒருமாத விடுமுறையில் ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து டிசம்பர் மாதம் துபாய்க்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதிக்கு துபாயில் தனது கணவர் நாகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக என தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உயிரிழந்த கணவருக்கு இறுதி சடங்குகளை முறைப்படி நடத்த அவரின் உடலை துபாயில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லாலிடம் சரஸ்வதி மனு அளித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap