செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பகுதியை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி அமுல். இவர்களுக்கு சந்துரு, ரஞ்சித் என 2 மகன்கள் உள்ளனர்.
சந்துரு உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்டதையடுத்து, சந்துருவின் பெற்றோர் தனது மகனின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரம் செலுத்தி உடனே நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து சந்துரு மற்றும் அவரது நண்பர்களுடன் இன்று விமானம் ஏறி நாளை வீட்டுக்கு செல்லலாம் என்பது போல விமான டிக்கெட் எடுத்துள்ளனர்.
ஆனால் அங்கு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் சந்துரு உள்ளிட்ட 3 மாணவர்களும் இந்த மாதம் 23 தேதி அன்று டிக்கெட் எடுத்து துபாய் வந்துள்ளனர். ஆனால் அங்கு விமானம் இல்லாததால் அங்கு ஒரு பகல், ஒரு இரவு என விமான நிலையத்திலேயே தங்கி நேற்று முன்தினம் கிளம்பி நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் சென்றனர்.
இது குறித்து சந்துரு கூறுகையில், “உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் 5 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். உக்ரைனில் போர் உச்சத்தில் இருப்பதால் அவசர அவசரமாக வந்துவிட்டோம். அனைத்து பொருட்களின் விலையும் 5 மடங்கு அதிகரித்து விட்டது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் குண்டு மழை பொழிவதை பார்த்து பதறிவிட்டோம்.
தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் தான் நாங்கள் முன் கூட்டியே வந்தோம். சாதாரணமாக விமான டிக்கெட் ரூ. 27 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை தான் ஆகும், ஆனால் தற்போது நாங்கள் ரூ. 75 ஆயிரம் செலவு செய்து தமிழகம் திரும்பியுள்ளோம்.
மேலும் எங்களுடன் படித்து வந்த 500-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்கள், வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார் சந்துரு.