தமிழ் மற்றும் தமிழ் மக்களின் தொன்மையை பறைசாற்றும் காணொளி உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
துபாயில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள துபாய் Expo 2020, மார்ச் 31 அன்று நிறைவடைகிறது.
துபாய் Expo 2020-வில் இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன. அதில் இந்திய அரங்கில், தமிழக அரசு சார்பில், அரங்குகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாய் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை அமீரக தமிழர்கள் சார்பில் பல்வேறு பிரமாண்டமாக வரவேற்றனர். அங்கு சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் நேற்று இரவு தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.