UAE Tamil Web

துபாயில் தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா? அவரது கெதி என்ன? கடலூர் கலெக்டரிடம் மனைவி மனு!

துபாய் சென்ற தனது கணவரை காணவில்லை என்றும் கலெக்டரிடம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவர் தனது மகனுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

2015 ஆம் ஆண்டு ரேவதிக்கும் ராஜனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு எனது ராஜன் துபாய்க்கு வேலைக்கு வந்துள்ளார். அவ்வப்போது ஊரில் உள்ள குடும்பத்திற்கு மொபைல் போனில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பேசுவதில்லை. அவருடன் பணிபுரிந்த நண்பர்களை தொடர்பு கொண்ட ரேவதி, எதுவும் தெரியாது என்று அவரது நண்பர்கள் கூறிவிட்டனர். ஆனால் ரேவதி பலமுறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், நேரில் சென்று முறையிட்டும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜன் 1/4/2019 இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் 9/8/2019 வரை ராஜன் தன்னுடன் பேசியதாக ரேவதி தெரிவித்துள்ளார்.

எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா, அவரது கதி என்ன? என தெரியாமல் தவிக்கிப்பதாக ரேவதி வருத்தத்துடன் கூறினார்.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ரேவதி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap