துபாயில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) மார்ச் 11, 2022 இன்று வெள்ளிக்கிழமை முதல் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான இண்டெர்வியுவை நடத்தி வருகிறது. இந்த ஓட்டுநர் வேலைக்கு மாத சம்பளம் 2,000 திர்ஹம்ஸ் வரை பெறலாம் என்று RTA தெரிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் ஓட்டுநர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த முழு நேர வேலைக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணபிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான நேர்காணல் மார்ச் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணலில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் CV-களை privilege.secretary@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 055-5513890 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆயிரம் திர்ஹம்ஸ் சம்பளம் மற்றும் கமிஷன், சுகாதார காப்பீடு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்றும் துபாய் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருப்பது அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம்: சிறப்புத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலகம் (Privilege Labour Recruitment Office) M-11, அபு ஹைல் சென்டர், தேரா- துபாய்.
நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வந்து கலந்துகொள்ளலாம்.
வயது: 23 மற்றும் 55 வயதுடையவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலம் என்று RTA தெரிவித்துள்ளது.