போலியான அமேசான் டெலிவரி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை அமீரக அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமீரகத்தில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் அவர்களின் சமூக ஊடகங்களில் இதுகுறித்த ஒரு விழிப்புணர்வை வெளியிட்டுள்ளனர்.
அதில் “சிலர் அமேசான் ஆர்டரைப் போல் பாசாங்கு செய்து ஒரு இணைப்புடன் (link) உங்களுக்கு SMS அனுப்புவார்கள்,” என்று கூறப்படுகிறது. மேலும் அந்த அனுப்பப்பட்ட லிங்கில் பெறுநர்களிடம் அவர்களின் தனிப்பட்ட ஐடி தகவலை நிரப்பும்படி அது கேட்கிறது என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற Fake ஆர்டர்கள் மூலம் பலர் ஏமாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது, ஆகவே மக்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TDRA வெளியிட்ட ட்விட்டர் பதிவு பின்வருமாறு..
இணைய வழியில் நடக்கும் மோசடிகளின் அளவு பெரிய அளவில் பெருகி வருகின்றது, நமது அமீரகம் மட்டுமல்லாமல் இது உலக அளவில் நடந்து வருகின்றது. மக்கள் விழிப்போடு இருந்து தங்களை தற்கொள்ள அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.