UAE Tamil Web

அமீரகம்.. கடற்கரைக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.. கடல் கொந்தளிப்போடு காணப்படும் – எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்

அமீரகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று இரவு 7.00 மணி வரை கடல் மிகவும் அலை மிகுந்ததாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவுப்புகளின்படி பகலில் சில சமயத்தில் வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 47°C ஐ எட்டும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் நாளை திங்கள்கிழமை காலை வேளைகளில் ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு நோக்கிய இடங்களில் கடல் கொந்தளிப்பாகவும், அரேபிய வளைகுடாவில் மிதமாகவும் காணப்படும் என்றும் NCM தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதாலும் அதே நேரத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதாலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே கடற்கரை பகுதிக்கு செல்லும்போது மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும் NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap