UAE Tamil Web

துபாய்: இரு முக்கிய சாலைகளை 2 நாட்களுக்கு மூடுவதாக RTA அறிவிப்பு..!

Stock-Dubai-skyline

துபாயின் இரண்டு சாலைகளை 48 மணிநேரத்திற்கு மூடுவதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து RTA வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,”ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை இரவு 12 மணிமுதல் ஆகஸ்ட் 29, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக அல்ஜீரியா செயின்ட் 71 வது செயிண்ட் மிர்டிஃப் சந்திப் போக்குவரத்து தாமதமாகலாம்” எனத் தெரிவித்துள்ளது.

அபு ஹைல் சாலையுடன் அல் ரஷீத் சாலை சந்திப்பு வெள்ளிக்கிழமை காலை 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணி வரை 48 மணி நேரம் மூடப்படும் என்றும் RTA குறிப்பிட்டுள்ளது.

“டிரைவர்களை கவனமாக இருக்கவும், திசை அறிகுறிகளைக் கடைப்பிடிக்கவும், தங்கள் இலக்குகளை அடைய மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என RTA வின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் ரஷீத் சாலைக்கான மாற்று வழியாக அல் கலீஜ் சாலையையும் அபு ஹெயில் சாலைக்கான மாற்று வழிகளாக அல் வுஹைதா சாலை மற்றும் அபு பக்கர் அல் சித்திக் சாலையைப் பயன்படுத்த RTA அறிவுறுத்தியுள்ளது.

Stock-Dubai-skyline
1 Share
Share via
Copy link