fbpx
UAE Tamil Web

மழை வெள்ளத்தில் மூழ்கிய பள்ளத்தாக்கில் சிக்கிய 10 எமிரேட்டிகள்!

அல் அய்னில் மழை வெள்ளத்தில் மூழ்கிய பள்ளத்தாக்கில் சிக்கிய 10 எமிரேட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மழை காலங்களின் இயற்க்கைச் சூழலை அனுபவிப்பதற்காக வாடி சாவுக்குச் (Wadi Saa) சென்ற நபர்கள் பள்ளத்தாக்கில் சிக்கினர், அவர்களை அபுதாபி காவல்துறையின் கீழ் உள்ள அல் ஐன் துரித நீர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த பள்ளத்தாக்கில் சிக்கிய ஆண்கள் காயங்களின்றி நல்ல நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சிக்கிய இவர்களைப் பற்றி வாடி சாவில் இருந்து மீட்புக் குழுவுக்கு மூன்று தனித்தனி அறிக்கைகள் வந்ததாக கூறப்படுகிறது.

மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதனை அடுத்து, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான பிற மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தற்போதைய மோசமான காலநிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர் நிலை பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அபுதாபி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கூடுதலாக, மின்சார வயரிங் லைன், மரங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.