UAE Tamil Web

அபுதாபி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கான டெர்மினல் மாற்றம்..!

airindia

அபுதாபியில் இருந்து இந்தியா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டெர்மினல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 4 மணி முதல் அபுதாபியில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் டெர்மினல் 2 லிருந்து தங்களது பயணத்தைத் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அபுதாபி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம்போல டெர்மினல் 3 க்கு வரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் RT-PCR பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அபுதாபியில் இருந்து பயணம் மேற்கொள்ளும் மக்கள் மேற்கண்ட செய்தியை கருத்தில்கொள்ளவேண்டும் என அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளது.