UAE Tamil Web

அபுதாபியில் இருந்து இந்தியா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் டெர்மினல் மாற்றம்

Air-India-Express-1-916x516

இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அபுதாபியில் இருந்து இந்தியா செல்வதற்கும், தரையிறங்குவதற்கும் டெர்மினல் முறையை மாற்றியுள்ளது.

அபுதாபி, துபாய் என சர்வதேச வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து சேவையை தினந்தோறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் செய்து வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அபுதாபி டெர்மினல் 2 விமான நிலையத்திருலிருந்து இந்தியவுக்கு மாலை நேரத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு அபுதாபி டெர்மினல் 1 விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் புறப்பட இருப்பதாகவும், அதே டெர்மினல் 1 நிலையத்தில் இந்தியாவிலிருந்து விமானங்கள் தரையிறங்க உள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்தவுடன் இலவச கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமீரகம் வழியாக வேறு ஒரு நாட்டிற்கு பயணம் மேர்கொள்ளும் பயணிகள், தாங்கள் சென்றடையும் நாட்டின் ஏதேனும் கொரோனா பாதுகாப்பு தொடர்பான தேவைகள் இருந்தால் மட்டும் பரிசோதனை மற்றும் தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பயணிக்க முடியும் என்று அபுதாபியின் எதிஹாட் விமான நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Air-India-Express-1-916x516
6 Shares
Share via
Copy link