துபாய் இன்ஃபினிட்டி பாலம் மற்றும் புதிய பாலங்களை சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, தேராவிலிருந்து பர்துபாய்க்கு செல்லும் ஷிண்டகா சுரங்கப்பாதையை மீண்டும் திறப்பதாக RTA அறிவித்துள்ளது.
துபாயின் ஷிண்டகா சுரங்கப்பாதை மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த ஜனவரி 16 அன்று மூடப்பட்டது. மேலும் இந்த பாதை மூடப்பட்டதை தொடர்ந்து மாற்று வழியையும் RTA அறிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13 அன்று, தேராவில் இருந்து பர்துபாய்க்கு செல்லும் போக்குவரத்திற்கான ஷிண்டகா சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
ஷிண்டகா சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதிய பாலங்களுடன் இணைப்பதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையின் திறன் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 15,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமமான RTA தெரிவிக்கப்பட்டுள்ளது.