fbpx
UAE Tamil Web

அமீரகத்தில் விரைவில் வருகிறது பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday sale).. 70% வரை தள்ளுபடி பெற தயாராகுங்கள்.!

black

அமீரகத்தில் உள்ள ரீடெய்லர்கள் அனைவரும் பிளாக் ஃப்ரைடே(Black Friday)விற்பனையைத் தொடங்க தயாராக உள்ளனர்.

ஒரு சில ரீடெய்ல் விற்பனையாளர்கள் ஒரு வாரம் வரையிலும் மற்றவர்கள் நவம்பர் முழுவதும் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் ஈடுபடலாம். மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பிளாக் ஃப்ரைடே என்று அழைக்கப்படும், மெகா-பிரபலமான விற்பனை நிகழ்விற்கு, சில உள்ளூர் இ -ரீடெய்ல் விற்பனையாளர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் வெள்ளி என்று பெயரிட்டுள்ளனர்.

நடப்பாண்டு பிளாக் ஃப்ரைடே நவம்பர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் atnoon.com-ன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ராடெஜி மூத்த துணைத் தலைவர் மாயா எல் அயாச் கூறுகையில், இந்த ஆண்டின் மஞ்சள் வெள்ளி விற்பனை நவம்பர் 23 அன்று தொடங்கி நவம்பர் 29 நள்ளிரவில் முடிவடையும். மேலும் இது எங்கள் மூன்றாவது மஞ்சள் வெள்ளி விற்பனை.இது இன்னும் பெரியதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்கள் 70% வரை தள்ளுபடி, ஆச்சரியமான ரேஃபிள்ஸ், நம்பமுடியாத ஆச்சரிய பரிசுகள் மற்றும் இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம்.

மஞ்சள் வெள்ளி விற்பனையை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே வியப்பூட்டும் சலுகைகள், கவுண்டவுன் ஸ்னீக்-பீக் டீல்கள்(countdown sneak-peek deals), முக்கியமாக நவம்பர் 11 அன்று மிகப்பெரிய 11/11 விற்பனை(11/11 sale) உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவோம் என்றும் கூறினார். மேலும் noon.com லாயல்ட்டி திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அமீரகத்தில் விசா டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 15% தள்ளுபடி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்பை விட அதிக வாடிக்கையாளர்கள் விற்பனையின் போது ஷாப்பிங் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், வீட்டு உபயோகப் பொருட்கள், ஹெல்த் மற்றும் பிட்னஸ் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் மொபைல்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றார் மாயா.

Amazon.ae செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் “கடந்த 6 ஆண்டுகளில், வெள்ளை வெள்ளி(White Friday) அமீரக வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு கொண்டாட்டமாக மாறிவிட்டது, ஏனெனில் மக்கள் தமக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நம்பமுடியாத டீல்களை பெறுகிறார்கள். தொற்றுக்கு இடையில் எங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து இந்த ஆண்டு நவம்பரில் மீண்டும் வெள்ளை வெள்ளியை நடத்துகிறோம்” என்றார்.

இதனிடையே பிளாக் ஃப்ரைடே விற்பனையின் ஒரு பகுதியாக கேரிஃபோர் யுஏஇ(Carrefour UAE) முக்கிய பொருட்களில் ஒரு மாத கால விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. டிசம்பர் 5 வரை நடைபெற உள்ள ‘கேரிஃபோர் வெள்ளி'(Carrefour Friday) பிரமோஷனின் போது, பை ஒன் கெட் ஒன் ஃபிரீ டீல்ஸ், , 70% வரை தள்ளுபடிகள், மளிகை பொருட்கள், மின்னணுவியல், வீட்டு உபகரணங்கள் மற்றும் ஹெல்த் மற்றும் அழகு பொருட்கள் உட்பட அனைத்து வகைகளிலும் 3 நாள் சூப்பர் விற்பனை உள்ளிட்டவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது100 திர்ஹம்ஸ் கேஷ்பேக் வவுச்சர்களைப் பெறலாம்.

இதனிடையே தங்களது மஞ்சள் வெள்ளி விற்பனை குறித்து கூடுதல் தகவல் தெரிவித்துள்ள மாயா, ” நடப்பாண்டு மஞ்சள் வெள்ளி(Yellow Friday) விற்பனையை சிறப்பானதாக மாற்ற எங்கள் குழு மிகவும் பிஸியாக தயாராகி வருகிறது. மஞ்சள் வெள்ளி சலுகையில் செய்யும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாகவும், விரைவாகவும் வழங்க 10,000-க்கும் மேற்பட்ட மஞ்சள் வேன்களை பயன்படுத்த உள்ளோம். மேலும் 100% தொடர்பு இல்லாத சேவைக்காக ஆன்லைன் மூலம் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் சேவையும் வழங்கப்படும் என்றார்.