UAE Tamil Web

அமீரக திமுகவின் முயற்சியால் தாயகம் அனுப்பட்ட தமிழரின் உடல்…

அமீரக திமுகவின் முயற்சியால், மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூரை சேர்ந்த ராஜீவ்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாக்கியசீலி என்பவர் பெரம்பலூர் கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் தன் கணவர் ராஜீவ்குமார் (39வயது) கடந்த டிசம்பர் 28ம் தேதி, துபாயில் அவர் தங்கியிருந்த அறையில் மாராடைப்பால் மரணமடைந்ததாகவும்,அவரது உடலை மீட்டு தாயகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தன் 2வயது கைக்கழந்தையுடன் கண்ணீருடன் கொடுத்திருந்தார்.

இந்த துயர சம்பவத்தை , திமுக அயலக அணி இணை அமைப்பாளர் யாழினி மூலம் துபாயில் உள்ள அமீரக திமுக அமைப்பாளர் S.S.மீரான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல்களையும்,அவர் கணவரின் உடலை விரைந்து மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தார்.

இ்ந்த பணிக்கு அமீரக திமுக நிர்வாகி V.M.பிரபுவை  நியமித்து மேற்படி நடைமுறைப்படுத்த வேண்டிய பணிகளை தன் ஆலோசனையின் பேரில் நடைபெற முடுக்கிவிட்டார்.

அக்குடும்பத்தின் மூலம் பெறவேண்டிய சட்டரீதியான ஆவணங்களை அமீரக திமுகவின் ஏற்பாட்டில் செய்து தரப்பட்டு,இறந்தவர் பணிபுரிந்த கம்பெனியின் ஒத்துழைப்புடன் விரைந்து அனுப்ப முயற்சிக்கப்பட்டது.

மேலும், அமீரகத்தில் புத்தாண்டு விடுமுறையின் காரணமாக தடைபட்ட பல அரசு சார்ந்த விஷயங்களை விரைந்து நடவடிக்கை எடுக்க அமீரக திமுகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.இறந்த ராஜீவ்குமாரின் உடல் எம்பாமிங் செய்து கார்கோ பெட்டியில் அடைக்கும்வரை அமீரக திமுக அமைப்பாளர் மீரான் உடனிருந்து ஏற்பாடு செய்தார்.

ராஜூவ்குமாரின் உடல் முறையான ஆவணங்களோடு, ஜனவரி-7ம் தேதி காலை ,திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது . அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டு, அவரின் சொந்த ஊரான பெரம்பலூர் பாளையத்தில் குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இவ்விஷயத்தை கேள்விப்பட்ட முன்னாள் மத்தியமைச்சரும்,நீலகிரி எம்பியுமான ஆ.ராசா அக்குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இச்செயலில் விரைந்து செயல்பட்ட அமீரக திமுகவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துகொண்டார்.

கடந்த 8 நாட்களாக இறந்தவரின் உடலை பத்திரமாக தாயகத்திற்கு அனுப்பும்வரை தொடர்ந்து செயலாற்றிய அமீரக திமுக அமைப்பாளர் S.S.மீரானுக்கும், அமீரக திமுக நிர்வாகி V.M.பிரபுவுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்கள் நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

1 Share
Share via
Copy link