ஷார்ஜா அல் டவுன் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது அரபு நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவர் தொடர்பாக ஷார்ஜா போலிஸாருக்கு தகவல் கிடைத்த பின், சிஐடி, ரோந்து மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கண்டுபிடித்தனர்.
12வது மாடியில் இருந்து குதித்த சிறுவன், மண்டை உடைந்து பல காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செலவதற்கு முன் குவைத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு மருத்துவர்கள் சிறுவனின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.
இது குறித்து அல் புஹைரா காவல் நிலைய அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி திறந்த பிறகும், தினமும் சிறுவன் இரவில் தாமதமாக வருவதால் தந்தை திட்டியுள்ளார். இதனால் பால்கனியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை செய்துக்கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.