UAE Tamil Web

துபாய் விமானத்தில் விடாமல் அழுத சிறுவன்… பயணிகள் செய்த சிறப்பான செயல்.. வைரலாகும் வீடியோ..!

துபாயில் இருந்து சென்ற FLY DUBAI விமானத்தில் அழுதுகொண்டு இருந்த சிறுவனுக்காக பாடல் ஒன்றினைப் பாடி சமாதானப்படுத்திய பயணிகள்.

துபாயில் இருந்து அல்பேனியா நாட்டிற்கு பறந்து கொண்டிருந்த FLY DUBAI விமானத்தில் அழுதுகொண்டு இருந்த சிறுவனுக்காக பாடல் பாடி சமாதானப்படுத்திய பயணிகளின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விமானத்தில் பயணித்த சிறுவன் ஒருவன் விடாமல் அழுதுக் கொண்டிருக்கிறான். அழுகையை சரி செய்ய அவனது தந்தை பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பின்னர் சிறுவனை தூக்கிக்கொண்டு நடக்கவும் செய்துருக்கிறார் தந்தை. ஆனாலும் சிறுவன் அழுகையை நிறுத்துவதுபோல் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Parikshit Balochi (@parikshitbalochi)

இதனையடுத்து சிறுவன் அழுதுக்கொண்டே இருப்பதைக் கவனித்த மற்ற பயணிகள் பேபி ஷார்க் (Baby Shark) என்னும் பிரபல கார்ட்டூன் பாடலை அனைவரும் சேர்ந்து பாடி சிறுவனின் அழுகை நிறுத்தினர்.

இந்த கியூட் நிக்ழவை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, தற்போது அது வைரலாகி வருகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap