UAE Tamil Web

துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிறுவனம்!

Fake1
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சவுடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவரிடம் தஞ்சை புதிய பேருந்துநிலையம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும்  முத்துக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அவரிடம் சரவணன் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முத்துக்குமார் துபாய்  அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதற்காக விசா கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக முத்துகுமார், சரவணனிடம் ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 500 கேட்டுள்ளார்.
அதன்படி சரவணன் முத்துக்குமாருக்கு 3 தவணைகளாக ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் சரவணனுக்கு விசா மற்றும் வேலைபார்ப்பதற்கான அனுமதி ஆணை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
அதனை பெற்றுக்கொண்டு தனது ஊருக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் தனக்கு தந்த விசா மற்றும் வேலை அனுமதி ஆணை போலியானது என்று தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன், முத்துகுமாரிடம் தொடர்புக்கொண்டுகேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. அப்போது தான் தன்னிடம் ரூ. 3  லட்சத்து 49 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap