துபாய் போலீஸ் சூப்பர் காரில் சவாரி ஆசைப்பட்ட 15 வயது சிறுவனனின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறையினர்.
துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி கூறுகையில், “சிறுவன் பாதுகாப்பு விழிப்புணர்வுத் துறைக்கு ஒரு தகவல் அனுப்பி என்னை சந்திக்க விருப்புவதாக தெரிவித்தார், இதனால் அச்சிறுவன் துபாய் காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது காவல்துறைப் பணிகள் குறித்த சிறுவனின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. தலைமையகத்தைச் சுற்றி சொகுசு போலிஸ் ரோந்துப் கார்களில் சிறுவனின் சவாரி செய்ய விரும்பியதால், அவரை காரில் அழைத்துச் சுற்றிக்காற்றப்பட்டது, பின்னர் அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது” என்றார்.
“துபாய் காவல்துறையின் கதவுகள் அனைவருக்கும், குறிப்பாக வருங்கால தலியமுறையினருக்காக் திறந்திருக்கும்” என்று அல் மர்ரி கூறினார்.
சமூகத்தில் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் பரப்புவதற்கான துபாய் காவல்துறை சிறுவனின் ஆசையை நிறைவேற்றியதாக அவர் மேலும் கூறினார்.