துபாயில் நடந்த 64-வது மஹ்சூஸ் வாராந்திர டிராவில் 100,000 திர்ஹம்ஸ் பரித்தொகையை இந்தியவைச் சேர்ந்த வெங்கடேசன் வென்றுள்ளார்.
அபுதாபியைச் சேர்ந்த ஐ.டி. வல்லுநர், தான் வெற்றிபெற்ற அறிவிப்பை கண்டதும் அதிர்ச்சியும் உற்சாகமும் அடைந்ததாகக் கூறினார். அதுவும் 100,000 திர்ஹம்ஸ் தானா என்று மீண்டும் மீண்டும் எண்களில் உள்ள பூஜ்ஜியங்களை எண்ணி உறுதிப்படுத்தினேன்” என்று அவர் கூறினார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான வெங்கடேசன், தனது குழந்தைகளையும் மனைவியையும் அமீரகத்தில் சிறிது காலம் தங்க வைக்க முடிவு செய்துள்ளார்.
“நான் நீண்ட காலமாக எனது குடும்பத்தை அமீரகத்திற்கு அழத்து வர முயற்சித்து வருகிறேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. இப்போது மஹ்சூஸ் டிராவில் வெற்றிபெற்றதால் இறுதியாக எனது குடும்பத்திற்கு ஆடம்பரமான முறையில் அனைத்தையும் வழங்க முடியும். மேலும் அவர்களுடனே நேரத்தை செலவிட முடிவெடுத்துள்ளேன்” என்றார்.
வெங்கடேசன் தனது வெற்றியின் ஒரு பகுதியை தனது குழந்தைகளுக்காக வங்கி வைப்புத் தொகையில் சேமிக்க திட்டமிட்டுள்ளார்.“எனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே எனது கடமை. அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காக தான் அவர்களை பிரிந்து வெளிநாட்டில் வந்து பணிபுரிகிறேன். எனது குழந்தைகளை கடைசியாகப் பார்த்து ஒரு வருடம் ஆகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
