UAE Tamil Web

வீடியோ: “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” – இளம்பெண்ணிடம் போனில் மன்னிப்புக்கேட்ட அபுதாபி இளவரசர் – நடந்தது என்ன?

sheikh-mohammed-first-emirati-female-mechanic-large

ஷார்ஜாவின் ஐமேக்ஸ் வாகன பராமரிப்பு நிலையத்தினை நடத்திவருகிறார் ஹுதா அல் மட்ரோஷி (36). இதிலென்ன பிரமாதம். இருக்கிறது. இதுதான் அமீரகத்திலேயே முதன்முறையாக ஒரு பெண்ணால் துவங்கப்பட்ட முதல் மெக்கானிக் நிறுவனம் ஆகும். அமீரகத்தின் முதல் மெக்கானிக் என்ற பெருமையும் மட்ரோஷியையே சாரும்.

தனது 16 ஆண்டுகால கனவினை கடந்தவருடம் தான் மட்ரோஷி நிறைவேற்றியிருக்கிறார். தொழில்முனைவோராகவும் இருக்கும் மட்ரோஷிக்கு கடந்த வியாழக்கிழமை ஒருபோன் கால் வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசியவர் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்.

இன்ப அதிர்ச்சியில் திளைத்த மட்ரோஷியிடம் அவரது முயற்சிக்கும் புதிதாக திறக்கப்பட்டுள்ள மெக்கானிக் நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் “பணி நேரத்தில் தொந்தரவு செய்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்” எனவும் அபுதாபி இளவரசர் தெரிவித்திருக்கிறார்.

இருவரும் போனில் பேசிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by HUDA ALMATROUSHI (@huda_almatroushi)

sheikh-mohammed-first-emirati-female-mechanic-large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap