UAE Tamil Web

அமீரகத்தில் முதன்முதலில் பாஸ்போர்டில் ரெசிடென்சி விசா ஸ்டாம்புக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடியை பெற்ற இந்தியர்!

அமீரகத்தில் ஏப்ரல் 11ஆன முதல் குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடி அவர்களின் ரெசிடெண்ட் ஆவணமாக செயல்படும். மேலும் ரெசிடெண்ட் விசாவுக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடி பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமீரக குடியிருப்பாளர்கள் ரெசிடெண்ட் விசா ஸ்டாம்ப் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. இனி எமிரேட்ஸ் ஐடி எனும் ஒரே விண்ணப்பத்தில் செயல்படலாம். மேலும், தங்கள் பாஸ்போர்ட்டுகளை ரெசிடெண்ட் விசா முத்திரையிடுவதற்காக அரசு அலுவலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்ற புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அமீரக வெளிநாட்டவர்கள் இந்த புதிய சேவையைப் பெறத் தொடங்கியுள்ளனர். குடியிருப்பாளர்கள் ரெசிடெண்ட் விசாவுக்கு பதிலாக எமிரேட்ஸ் ஐடி பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்படுவதில் நன்மைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

இது குறித்து ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான உத்தேஷ் ஹெக்டே அமீரகத்தில் முதன்முதலில் பாஸ்போர்டில் எமிரேட்ஸ் ஐடி முத்திரையிடப்பட்ட குடியிருப்பாளர் ஆவார்.

இது குறித்து உத்தேஷ் கூறுகையில், ஏப்ரல் 14 அன்று நான் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக நேபாளத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். மேலும் விசாவின் நகல் என்னிடம் இல்லாததால் எனது பயணம் குறித்து கவலை அடைந்தேன். பின்னர் அமீரக அரசின் இந்த புதிய திட்டத்தால் பாஸ்போர்டில் எமிரேட்ஸ் ஐடியின் முத்திரையிடப்பட்டு பயணத்துக்கு தயராகினேன்.

மேலும் இது தொடர்பாக அல் நஹ்தா வணிக மையத்தின் பொது மேலாளர் ஷமிம் யூசுப் கூறுகையில், “எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்சி விசாக்களுக்கான டைபிங் நடமுறையில் மாற்றமில்லை.

இதில் முக்கிய மாற்றம் என்னவென்றால், பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படாது. விர்ச்சுவல் எமிரேட்ஸ் ஐடி சேவையைப் போலவே, வெளிநாட்டவர்கள் தங்கள் இ-விசாக்களை அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அத்தாரிட்டிஸ் (ICB) செயலியில் பார்க்கலாம்” என்று தெரிவித்தனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap