இந்தியா மற்றும் அமீரகம் இடையே அடுத்த 5 ஆண்டுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அபுதாபி இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜயீத் அல் நஹ்யான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே கூட்டு முயற்சி தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான ஐ.ஐ.டி. (Indian Institude of Technology) விரைவில் அமீரகத்தில் தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை துவக்க உள்ளாது.
இந்தியாவில் இதுவரை 23 ஐ.ஐ.டி. வளாகங்கள் உள்ள நிலையில், அமீரகத்தில் துவங்கப்பட இருக்கும் இந்த புதிய வளாகம் இந்திய கல்வித் தரத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.