துபாயிலிருந்து 1 கிலோ தங்கத்தை ஒப்படைக்காத நபரை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் என்பவர் துபாயில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் ஜனவரி மாதம் 29ஆம் தேதி துபாயிலிருந்து ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தபோது அருண் பிரசாத் என்பவர் செல்லப்பனிடம் ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபரிடம் ஒப்படைத்தால் ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த தங்க கட்டிகளை செல்லப்பன் தனது உடலுக்குள் பதுக்கி வைத்து விமானத்தில் கடத்தி வந்த நிலையில், வலி ஏற்பட்டதால் அவருடன் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த அனிஷ் குமார் என்பவரிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்து விட்டு செல்லப்பன் சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் செல்லப்பனிடம் தங்கத்தை எங்கே என கேட்டு, தங்கத்தை பெற்று சென்ற அனிஷ் குமாரை கண்டுபிடிக்க கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று தேடி வந்துள்ளனர்.
பின்னர் அனீஷ் குமாரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சென்னையில் சுமார் 40 நாட்களுக்கும் லேமாக செல்லப்பனை ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதில் செல்லப்பன் உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனியில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.