ஷார்ஜா சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்திருப்பதோடு, நடைறையுலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஷார்ஜாவில் கடலோர பகுதியான கல்பாவில் புதிய கிளாக் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியான கல்பா அமீரக மக்களின் ஃபேவரேட் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அமீரக சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, கல்பாவில் இந்த பிரம்மாண்ட கிளாக் டவரை நேற்று திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிளாக் டவர் கட்ட ஷார்ஜா ஆட்சியாளர் அடிக்கல் நாட்டிய நிலையில் தற்போது பார்வையாளார்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. 42 மீட்டர் நீளமுள்ள இந்த கிளாக் டவர், கல்பாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பார்க்கக்கூடிய வகையில் உயரமாக கட்டப்பட்டுள்ளது.