அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் உள் பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில், வெப்பமாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்றும் கடலோரப் பகுதிகள் வெப்பநிலை அதிகரிப்புடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் காற்றால் சில நேரங்களில் பகல் நேரத்தில் தூசி வீசவும் வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.