UAE Tamil Web

ஷார்ஜாவில் திறக்கப்பட்ட மிகப்பெரிய சஃபாரி பார்க்.. குவியும் பார்வையாளர்கள்

அமீரகம் ஷார்ஜா சஃபாரி பார்க் இன்று திறக்கப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சஃபாரி பார்க்-ஐ அடுத்து மிகப்பெரிய பார்காக ஷார்ஜா சஃபாரி பார்க் உள்ளது.

இந்த சஃபாரி பார்க் ஷார்ஜாவின் அல் தைத் (Al Dhaid) பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. 120 வகையான விலங்குகள் மற்றும் 100,000-க்கும் அதிகமான ஆப்பிரிக்க மரங்கள் உள்ளது. இந்த சஃபாரி பார்க் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

Construction progresses on Sharjah Safari at Al Bardi Reserve in Al Dhaid - Construction Week Online
டிக்கெட் கட்டணங்கள்:

ப்ரொன்ஸ் (Bronze) டிக்கெட்டுகள்:

  • 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 திர்ஹம் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 திர்ஹம் கட்டணம்.
  • இரண்டு முதல் மூன்று மணி நேரம் சஃபாரி பார்க்-ஐ சுற்றிப் பார்க்கலாம். நடந்துதான் சுற்றிப்பார்க்க இயலும்.

வெள்ளி டிக்கெட்டுகள்:

  • 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 120 திர்ஹம்ஸ் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50 திர்ஹம்ஸ். இதற்கென தனி வாகனம் ஒதுக்கி சுற்றிக்காட்டப்படும்.
  • சுற்றுப்பயணத்தின் நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம்.

Sharjah to open largest safari park outside Africa | ZAWYA MENA Edition

கோல்டன் டிக்கெட்டுகள்:

  • 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 275 திர்ஹம் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 120 திர்ஹம்ஸ்.
  • சுற்றுப்பயணத்தின் காலம் ஐந்து முதல் ஆறு மணி நேரம்.
  • இதற்கும் வகனம் ஒதுக்கப்பட்டு தனிப்பட்ட வழிகாட்டியுடன் ஷார்ஜா சஃபாரியை சுற்றிக்காட்டப்படும்.
  • ஆறு நபர்கள் சொகுசு வாகனத்தில் பயணிக்க 1,500 திர்ஹம்ஸ், ஒன்பது நபர்களுக்கு சொகுசு வாகனத்தில் பயணிக்க 2,250 திர்ஹம்ஸ் மற்றும் 15 பேருக்கு சொகுசு வாகனத்தில் பயணிக்க 3,500 திர்ஹம் ஆகும்.

Work on Sharjah Safari project to cost $272m, create 300 jobs - Construction Week Online

செயல்படும் நேரங்கள்:

  • காலை30 முதல் மாலை 6.30 வரை இயங்கும்.
  • கோல்ட் மற்றும் சில்வர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
  • ப்ரோன்ஸ் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap