அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையான இன்று அமீரகத்தின் சில பகுதிகளில் தூசி மற்றும் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் குறிப்பாக சில கடலோர மற்றும் வடக்கு பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று தேசிய வானிலை மையமான NCM தெரிவித்துள்ளது.
இதனால் இன்று இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஈரப்பதம் இருக்கும். லேசான காற்று முதல் மிதமான காற்று வீசக்கூடும், சில சமயங்களில் ஈரப்பதத்துடன் காற்று வீசுவதற்கும் வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக அபுதாபியின் பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி நிலவிய நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையமான (NCM) சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
