அமீரகத்தில் இப்போது தான் தேசிய தினத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறையை மக்கள் அனுபவித்திருக்கின்றனர். இனி அடுத்த தொடர் விடுமுறை எப்போது? எனத் தேடினால் ரமலான் மாதம் முடிவடைவதைக் குறிக்கும் ஈத் அல் பித்ர் -ஐ முன்னிட்டு ஏப்ரல் 29, 2022 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மே 4, 2022 ஆம் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை கிடைக்க இருக்கிறது.
இருப்பினும் அமீரகத்தின் பிறை பார்க்கும் கமிட்டியே இந்தத் தேதியை உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டில் வரவிருக்கும் விடுமுறைகளின் பட்டியல்..!
- சனிக்கிழமை, ஜனவரி 1: புத்தாண்டு தினம்
- சனிக்கிழமை, ஏப்ரல் 30 முதல் மே 4 புதன்கிழமை வரை: ஈத் அல் பித்ர்
- வெள்ளி, ஜூலை 8: அரபத் தினம்
- ஜூலை 9, 10 மற்றும் 11 (சனி முதல் திங்கள் வரை): ஈத் அல் அத்ஹா
- சனிக்கிழமை, ஜூலை 30: இஸ்லாமிய புத்தாண்டு
- சனிக்கிழமை, அக்டோபர் 8: முகமது நபியின் பிறந்த நாள்
- வியாழன், டிசம்பர் 1: தியாகிகள் தினம்
- டிசம்பர் 2 மற்றும் 3 (வெள்ளி, சனி): அமீரக தேசிய தினம்