2022 முதல் காலாண்டு பகுதியில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 13.6 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்,
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின்படி, காலாண்டு பகுதியில் பயணிகள் போக்குவரத்து 10 மில்லியனைத் தாண்டியதால், விமான நிலையங்களில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி மார்ச் 2022-இல் மட்டும் 5.5 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை அதிகாரி பால் கிரிஃப்த்ஸ் கூறுகையில், “இந்த ஆண்டுக்கான பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி வருடாந்திர போக்குவரத்து 58.3 மில்லியன் பயணிகளை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு முன், 2019-இல் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளின் வருகை 86.4 மில்லியனாக பதிவாகியது.
இந்த காலாண்டு பகுதியில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 13.6 மில்லியன் பயணிகளின் 1.6 மில்லியன் இந்திய பயணிகளாகும்.
அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிலிருந்து 1.1 மில்லியன் பயணிகளும், பாகிஸ்தானிலிருந்து 997,000 பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 934,000 பயணிகளும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்” என்று பால் கிரிஃப்த்ஸ் தெரிவித்தார்.