உலகின் மிகப்பெரிய ராட்டினமான ஐன் துபாய் நேற்று வாணவேடிக்கைகளின் பிரம்மாண்ட வெளிச்சத்தில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது.
புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினத்திற்கு ‘ஐன் துபாய்’ (Ain Dubai) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இது 2 மடங்கு பெரியது. ஐன் துபாய் ராட்டினத்தில் ஒரு தடவை சுற்றிவர மட்டுமே 38 நிமிடங்கள் ஆகும். அத்துடன் இந்த ராட்டினத்தில் குளிர்சாதன வசதியுடன் 48 கேபின்கள் உள்ளன.
The official opening celebration of @AinDXBOfficial kicks with a stunning light and drone show and fireworks. #Dubai pic.twitter.com/OCA6RwZqE5
— Dubai Media Office (@DXBMediaOffice) October 21, 2021
ஒருமுறை சுமார் 1,750 பயணிகள் ராட்டினத்தில் சுற்றி வரலாம். சிறப்பு கேபின்கள் இரண்டு டபுள் டெக்கர் பேருந்துகளை விட பெரியது எனக் கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான கோபுரம் என புர்ஜ் கலீஃபா பெயர் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த ராட்டினம் மூலம் துபாய்க்கு மேலும் ஒரு உலகப் புகழ் கிடைத்துள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று இந்த ராட்டினத்தின் உச்சியில் இருந்தபடி காபி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
