UAE Tamil Web

சூர்யாவின் அயன் படம் போன்று தங்கத்தை கடத்திய நபர் கைது

File Image

அபுதாபியில் இருந்து புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான படம் அயன். இப்படத்தில் சூர்யா விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளிநாட்டில் தங்கம் கடத்திவருவார்.

அதேபோல், ஒருவர் தலைமுடியை வெட்டிவிட்டு, தங்கத்தை பேஸ்ட் போன்று மாற்றி அதை தலையில் வைத்து, அதன் மேல் விக்-ஐ மறைத்து அபுதாபியில் இருந்து புது டெல்லிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடத்த  முயற்சித்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் கடத்திய தங்கத்தின் எடை 630.45 கிராம்.  இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.55  லட்சம் என கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap