ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் “போர் வேண்டாம் ப்ளீஸ்” (No war please) என்று அங்குள்ள கேமராவில் எழுதியுள்ளார்.
ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ ராணுவ தாக்குதலை உக்ரைன் மீது தொடங்கியது, இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துபாய் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய நாட்டு வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் விளையாடினார்.
டென்னிஸ் வீரர்கலின் தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரி ருப்லெவ் அரையிறுதி ஆட்டத்தில் போலாந்து வீரர் ஹூபர்டை தோற்கடித்தார்.
இந்த அரையிறுதி போட்டி வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ரஷ்ய வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் தனது வெற்றிக்கு பின், போட்டியை ஒளிபரப்பு செய்த கேமராவில் “போர் வேண்டாம் ப்ளீஸ்” (No war please) என்று எழுதியுள்ளார்.
Russian tennis player Andrey Rublev writes “No war please” on the camera following his advancement to the final in Dubai. pic.twitter.com/GQe8d01rTd
— TSN (@TSN_Sports) February 25, 2022
இந்த நிலையில் ரஷ்ய வீரரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.