UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு ஷார்ஜாவில் உணவகங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

நோன்பின் போது தங்கள் கடைகளின் முன் ஸ்டாண்டுகள் அமைத்து உணவு விற்க அனுமதி அளிக்கபடுவதாக ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ரமலானில் அஸர் (பிற்பகல்) தொழுகை நேரத்திலிருந்து இப்தார்  (சூரியன் மறையும்) நேரம் வரை உணவகங்களில் உணவை வெளியில் வைத்து விற்பனை செய்யலாம்.

சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா அதிகார சபை தெரிவித்துள்ளது.

உணவை வெளிக் காட்டுவதற்கான விதிகள்:
  • மணல் பகுதி இல்லாத கடைகளுக்கு வெளியே உணவு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
  • காற்றுப் புகாத கண்ணாடி அல்லது தரமுள்ள பெட்டியில் வைத்து உணவு விற்பனை செய்ய வேண்டும்
  • துருப்பிடித்த பெட்டியில் வைத்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • உணவை சரியான வெப்பநிலையில் வைக்க வேண்டும்
  • காண்பிக்கப்பட்ட உணவுவகைகள் சுகாதாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap