அஜ்மானில் டாக்சி ஓட்டுநரான வசீம் முஹம்மது அர்ஷாத், தனது வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற பெரும் தொகையைத் திருப்பிக் கொடுத்து பாராட்டைப் பெற்றுள்ளார்.
டாக்சி ஓட்டுநரான வசீம் முஹம்மது அர்ஷாத், தனது வாகனத்தில் பயணித்த பயணி ஒருவர், தனது பெரும் தொகையைத் வாகனத்திலேயே மறந்துவிட்டு விட்டுச் சென்றுள்ளார். பின்னர் அந்த பயணியை தொடர்புக் கொண்டு தொகையைத் திருப்பிக் கொடுத்து வாழ்த்துகளை பெற்றார் ஓட்டுநர். இதனை அடுத்து இந்த நெகிழ்ச்சிமிக்க சம்பவத்திற்கு அஜ்மான் பொது போக்குவரத்து ஆணையமான APTA வசீமின் நேர்மை பாராட்டி கௌரவித்தது.
பயணி தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் டிரைவர் வசீமுக்கு தெரிவித்த பிறகு, அஜ்மான் பொது போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ஓட்டுநரின் இந்த நேர்மறையான நடத்தை பாராட்டும் விதமாக பொது போக்குவரத்து ஆணையம் அவரை கௌரவித்தது.