UAE Tamil Web

பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் கருப்பு நாடுகள் பட்டியலில் தொடரும் அமீரகம்..!

சா்வதேச அளவிலான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை கண்காணித்து தடுக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகா் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1989-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பான எஃப்.ஏ.டி.எஃப்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்க அமைப்பு வகையில் வெளியிடப்படும் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான திட்ட நடைமுறைகளை முழுமையாக பூா்த்தி செய்யாத நாடுகளை, கருப்புப் பட்டியிலில் இந்த அமைப்பு தொடா்ந்து வைத்திருக்கும்.

இந்த நிலையில், இந்த அமைப்பு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், அமீரகம் உள்பட 23 நாடுளை தொடா்ந்து கருப்பு நாடுகள் பட்டியலில் வைத்திருக்க எஃப்.ஏ.டி.எஃப் தீா்மானித்துள்ளது. நடைமுறைகளை முழுமையாக நிறைவேற்றாத அமீரகம், ஜோா்டான், சிரியா, யேமன் உள்பட 23 நாடுகள் தொடா்ந்து கருப்புப் பட்டியலில் வைக்க முடிவெடுக்கப்ப்பட்டுள்ளது.

அந்த வகையில், சா்வதேச அளவிலான சட்ட விரோத பணப் பரிவா்த்தனையை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்திற்காக பாகிஸ்தானை கடந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கருப்பு நாடுகள் பட்டியலில் எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பு வைத்துள்ளது.

கருப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை சா்வதேச தர நிா்ணய அமைப்புகளும், நிதி நிறுவனங்களும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் வைத்திருக்கும். அதன்படி, அந்த நாடுகள் சா்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாக நிா்ணயிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 Shares
Share via
Copy link