துபாயில் பெண்ணின் வங்கி கணக்கில் நூதன முறையில் திருட்டு – 3 ஆண்டு சிறை.!

துபாயில் ஒரு பெண்மணியின் வங்கி கணக்கில் நூதனமான முறையில் திருடியவர் சிறையில் அடைப்பு.

துபாயில் குடிபெயர்ந்து வசித்து வருபவர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 8 லட்சத்து 23 ஆயிரம் திரஹம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 கோடிக்கு மேல் ஒரு பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து திருடியது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்காக இவருக்கு துபாய் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை காலம் முடிந்த பிறகு அவரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பந்தமான நீதிமன்றத்தின் கேள்விக்கு, குற்றவாளி பெண்மணியின் பேரில் தொலைபேசி எண்ணை மாற்றியமைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் மோசடி, திருட்டு மற்றும் போலியான ஆவணங்கள் தயாரித்த குற்றத்திற்காக அவருக்கு அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Source – Khaleej Times

Loading...