UAE Tamil Web

டாப் 10 : உலக சாதனை படைத்த அமீரக இடங்களின் பட்டியல்..!

uae

அமீரகத்தில் சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற முக்கியமான இடங்கள் என்றதும் புர்ஜ் கலீஃபா தான் நம்மில் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி பல இடங்கள் சாதனைகளை செய்து உலகளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

- Advertisment -

இப்படி உலகளவில் சாதனை படைத்த டாப் 10 அமீரக இடங்களை கீழே காண்போம்.

உலகின் நீளமான Zip Line

சாகசம் செய்வதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பவரா நீங்கள்? உங்களுக்கான இடம் தான் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் சிப் லைன்.  2.83 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சிப் லைன் தான் உலகிலேயே மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் நீள பயணம். அதுவும் ஒரு கம்பியை நம்பி. உயரத்தில் இருந்து கிளம்பினால் போதும். மற்றவற்றை புவியீர்ப்பு விசை பார்த்துக்கொள்ளும். தைரியமிருப்பவர்கள் தாராளமாய் செல்லுங்கள்.

Jebel-jais-flight
Image Credit: Insta/visitjebeljais

உலகின் மிகப்பெரிய குவிமாடம்

குவிமாடம் என்றால் என்ன என யோசிக்கிறீர்களா? குவிந்த மேற்புற கூரையைத் தான் குவிமாடம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் Dome என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய குவிமாடம் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் தான் இருக்கிறது. 32.7 மீட்டர் விட்டம் கொண்ட இந்த குவிமாடத்தின் உயரம் (தரையிலிருந்து மேல்பகுதி வரையில்) 85 மீட்டர்களாகும். மிகப்பிரம்மாண்டமான மசூதிக்கு மணிமகுடம் போல கட்டப்பட்டிருக்கும் இந்த குவிமாடத்தைப் பார்த்தவுடன் பிரம்மிப்பு ஏற்படுவது உறுதி.

Zayed-Mosque
Image Credit: Gulf News

உலகின் மிகப்பெரிய கம்பளம்

அடுத்ததாக நாம் பார்ப்பது உலகின் மிகப்பெரிய கம்பளம். அதுவும் கையால் நூற்க்கப்பட்டது. சுமார் ஒரு வருடம் 1,200 கலைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்த பிரம்மாண்ட கம்பளம் நாம் முன்பே பார்த்த ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் இருக்கிறது. இதே மசூதியில் 17,000 சதுர மீட்டர் பரப்பளவில் மார்பிள் மொசைக் போடப்பட்டுள்ளது. இந்த மார்பிள் மிகப்பெரிய பரப்பளவில் போடப்பட்ட இடம் இதுதான்.

Zayed-Carpet_
Image Credit: Gulf News

மிகப்பெரிய பூந்தேட்டம்

அல் அய்னில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய பூந்தோட்டத்தில் 2,426 வடிவங்களில் பூக்கள் வளர்க்கப்படுகிறது. பூ மற்றும் மரக்கன்றுகள் என சுமார் 1,000,000 செடிகள் இங்கே வளர்க்கப்படுகின்றன. மிகப்பெரிய பூந்தொட்டி கண்காட்சியும் இங்கே இருக்கிறது.

Al-Ain
Image Credit: Gulf News

உலகின் மிக வேகமான ரோலர் கோஸ்டர்

ஃபெராரி அபுதாபி வேர்ல்டில் இருக்கும் ஃபார்முலா ரோஸா ரோலர் கோஸ்டர் தான் உலகின் மிக வேகமான ரோலர் கோஸ்டர் ஆகும். மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இது நிஜ சாகசப் பிரியர்களுக்கானது.

Ferrari-World-Abudhabi-
Image Credit: Gulf News

நீளமான டனல்

இந்தப் பிராந்தியத்திலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை அமீரகத்தில் அமைந்துள்ளது. ஷார்ஜாவையும் கோர் ஃபக்கானையும் இணைக்கும் இந்த சுரங்கப்பாதையின் நீளம் 2.7 கிலோமீட்டர்களாகும்.

NEW-SHARJAH-KHOR-FAKKAN-ROAD-_
Image Credit: Gulf News

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று

துபாய் பாம் ஃபவுண்டைன் தான் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று. பாம் ஜூமெய்ராவில் அமைந்திருக்கும் இந்த நீரூற்று 14,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் பொருத்தப்பட்டுள்ள நாஸில்களால் 105 மீட்டர் உயரத்திற்கு நீரைப் பாய்ச்ச முடியும்.

Palm-Fountain_
Image Credit: Gulf News

உலகின் மிகப்பெரிய போட்டோ பிரேம்

துபாய் சபீல் பார்க்கில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பிரேம் தான் உலகின் மிகப்பெரிய போட்டோ பிரேம் என கின்னஸ் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 150 மீட்டர் உயரமுள்ள இந்த பிரேமின் மேலிருந்து துபாயின் அற்புதமான காட்சியைப் பார்க்க முடியும். இங்கேயுள்ள கண்ணாடியால் உருவாக்கப்பட்ட 25 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பாலத்தில் நடந்து சென்றால் காற்றில் மிதக்கும் அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

NAT-200529-DUBAI-FRAME
Image Credit: Gulf News

உலகின் மிகப்பெரிய கட்டிடம்

நமக்கு மிகவும் பரீட்சையமான புர்ஜ் கலீஃபா. 2,716 அடி உயரம். நியூயார்க்கில் உள்ள எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை விட இரண்டு மடங்கும், பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட மூன்று மடங்கும் பெரியது இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடம்.

Stock-Dubai-skyline-Burj-Khalifa_
Image Credit: Ahmed Ramzan/Gulf News

உலகின் உயரமான ஹோட்டல்

துபாயில் உள்ள ஜெரோவா ஹோட்டல் தான் உலகின் மிக உயரமான ஹோட்டல்.  கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டிடத்தின் உயரம் 1,168 அடிகளாகும்.

Gevora-Hotel-in-Dubai_
Image Credit: Gulf News