UAE Tamil Web

துபாயில் நண்பர்களிடம் 3 லட்சம் திர்ஹம்ஸ் திருடி மாட்டிக்கொண்ட திருடன் கைது!

துபாயில் ஒரு பெண் உட்பட நான்கு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள், பணத்தகராறு காரணமாக ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல் பர்ஷா பகுதியில் ஒரு பெண் உட்பட நான்கு ஆசிய நாட்டவர்கள், ஒரு நபரை தாக்கி, ரத்தம் சொட்டட்ட படங்களை பிடித்து அவரது காதலிக்கு அனுப்பி, 3 லட்சம் திர்ஹம்ஸ் செலுத்துமாறு மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்த போலிஸ் விசாரணையில், சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பரை ஒரு கும்பல் கடத்திச்சென்று தாக்கியுள்ளதாக அல் பர்ஷா காவல்துறைக்கு புகார் தெரிவித்தார்.

போலிஸார் உடனடியாக சிஐடி குழுவை அமைத்து தேடுதல் மற்றும் விசாரணை நடத்தினர். அதிகாரிகளல், பாதிக்கப்பட்ட நபர் இருந்த விட்டை கண்டுபிடித்து அந்த இடத்தை சோதனை செய்தனர்.

பின்னர் கடத்தப்பட்ட அந்த நபர் நாற்காலியில் கை விலங்கிடப்பட்டிருப்பதையும், அவரை கட்டுப்படுத்த இரண்டு ஆட்கள் அருகில் இருப்பதையும் காவல்துறை உறுதி செய்து அவர்களிமிருந்து அந்த நபரை மீட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர், அல் பர்ஷாவில் எனது நண்பனின் பணத்தை தான் நான் திருடிவிட்டேன். என்னைக் கடத்தியவர்கள் நான் திருடிய பணத்தைக் கேட்டு தாக்கினர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்பலும் திருடப்பட்ட பணத்தை திரும்பப் பெறவதற்காக பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக ஒப்புக்கொண்டனர். கடத்தப்பட கும்பல், ஆன்லைனில் சூதாட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து, போலிசார் அந்த கும்பலை கைது செய்தனர் .

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap