39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்லும் திட்டத்தின் மூன்றாம் பகுதி அறிவிப்பு!

Air-India-Express-Kochi-repatriation-flights-Kerala

துபாய் : அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அமீரக வாழ் இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்லும் திட்டத்தின் மூன்றாம் பகுதியாக மே 26 முதல் ஜூன் 4 வரை நடைபெற இருக்கும் விமானப் போக்குவரத்தின் உத்தேச கால அட்டவணையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

மே 7 முதல் மே 23 வரையில் நடைபெற்ற வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டு பகுதிகளின் மூலமாக 6000 இந்தியர்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள்.

அமீரகத்தில் இதுவரை 3,50,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலிருந்து அதிகமான புலம்பெயர் மக்களைக் கொண்டிருக்கும் அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையான 34 லட்சத்தில் இது 10 சதவிகிதம் ஆகும்.

இதையும் படிங்க.!